Tamil Nadu Reddy Jana Sangam
ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார், ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதி ஆவார். இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1947 முதல் 1949 வரை பதவி வகித்துள்ளார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றிய கூடுதல் தகவல்கள்:
பிறப்பு: 1 பிப்ரவரி 1895
இறப்பு: 25 ஆகஸ்ட் 1970
பதவி: சென்னை மாகாணத்தின் முதலமைச்சர்
பதவிக்காலம்: 23 மார்ச் 1947 முதல் 6 ஏப்ரல் 1949 வரை
சுதந்திரப் போராட்ட வீரர்: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
விவசாயம்: அரசியலில் இருந்து விலகிய பிறகு, வடலூரில் விவசாயப் பணியில் ஈடுபட்டார்.
சமூக சேவைகள்: வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். மேலும், வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் போன்ற பல நிறுவனங்களை நிறுவினார்.
இந்திய அஞ்சல் தலை: இந்தியாவின் 2010 அஞ்சல் தலையில் இவர் இடம் பெற்றுள்ளார்.
ஓமந்தூர் பெ. இராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiyar) (1 பிப்ரவரி, 1895 - 25 ஆகத்து 1970) இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
ஆரம்ப வாழ்க்கை
தொகு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் வால்டர் சுடர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
முதலமைச்சராக
தொகு
இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். இவர் விடுதலையடைந்த இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவார். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை செயல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார்
ஹைதராபாத் இணைப்பு
தொகு
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாதுக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என படேலுக்கு ஒமந்தூரார் எச்சரிக்கை செய்தார். அதன் பின்னரே ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டது. இந்த அரும்பணிக்காக படேல் அவர்கள் ஒமந்தூராரை மனம் திறந்து பாராட்டினார். ஆனால் பின்நாளில் எழுதப்பட்ட வரலாற்றில் ஒமந்தூராரின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
இறுதி வாழ்வு
தொகு
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஒமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மீகத்தின் பக்கம் சென்றது. அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். இவர் ஆகத்து 25, 1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
நினைவு
தொகு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது.[1][2]
இந்திய அஞ்சல் துறை ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.[3]
மு.கருணாநிதி ஆட்சியில் இவர் நினைவாக 'ஓமந்தூரார் மாளிகை' புதிய தலைமை செயலகத்திற்காக சென்னை அண்ணாசாலையில் பிப்ரவரி 2014 கட்டிமுடிக்கப்பட்டது. பின் ஆட்சி பொறுப்பேற்ற ஜெ.ஜெயலலிதா 400 படுக்கை வசதி கொண்ட 'ஓமந்தூரார் பலதுறை மருத்துவமனை'யாக மாற்றினார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஒரு இந்திய மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஆசியாவின் முதல் பெண் மருத்துவர் மற்றும் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவர இவர் முக்கிய பங்கு வகித்தார். முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மருத்துவர் மற்றும் சென்னை ராணி மேரி கல்லூரியின் முதல் பெண் முதல்வர் ஆனார். சமூக சீர்திருத்தவாதியாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக இவர் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தேவதாசி முறையை ஒழிப்பதற்காக இவர் செய்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. இவரது முயற்சியால், 1930 ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சட்டமன்ற உறுப்பினராக, பெண்களின் உரிமைகளுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் இவர் குரல் கொடுத்தார். 1956 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
சு. முத்துலட்சுமி (Muthulakshmi)(சூலை 30, 1886 - சூலை 22, 1968) ஆகிய இவர் முத்துலட்சுமி ரெட்டி என்று பரவலாக அறியப்படுகிறார். மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் முத்துலட்சுமி ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.[1][2]
இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி ஐயர், சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.
பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலவிய காலக் கட்டத்தில், அதை உடைத்து 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை பக்க பலமாக இருந்தார். வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை என்பதுடன் உள்ளூர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடும் இருந்தது. இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார். கல்லூரியில் சேர்ந்த பின், சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது. இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-இல் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.[சான்று தேவை] திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Annie Beasant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.
இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு. அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார். 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு,[4] இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை. அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி. சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கினார்.[5] அதற்காகப் பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனையான இது சுமார் 80000 நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளது.[6][7]முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்தது
அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர். தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்தின் தந்தை அழைக்கப்படுகிறார்.
பிறப்பும் கல்வியும்
தொகு
அண்ணாமலை ரெட்டியார் தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் ஊரை அடுத்துள்ள சென்னிகுளத்தில் பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார்.
பதினெட்டு வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்று, அங்கு குறுநிலத் தலைவராக இருந்த இருதயாலய மருத்தப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.
இயற்றியவை
தொகு
காவடிச் சிந்து
வீரை தலபுராணம்
வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்
கோமதி அந்தாதி
சங்கரன் கோவில் திரிபந்தாதி
கருவை மும்மணிக்கோவை ஆகியவற்றை இயற்றினார்.
மறைவு
தொகு
இவர் நோய் காரணமாக 1891 ஆம் ஆணடு, தனது 26 ஆவது வயதில் காலமானார்.
காவடிச்சிந்து புகழ் அண்ணாமலை ரெட்டியார்
இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் சிந்து இசை என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து, நாடி, நரம்ப
முனைவர் சி.சேதுராமன்
Published:1st Nov, 2009 at 6:30 AM
Updated:20th Sep, 2012 at 8:19 PM
இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் சிந்து இசை என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச் செய்யும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் ஏற்கச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவானது காவடிச் சிந்து. இது புதியதொரு இலக்கிய விருந்தாகும். இப் புதிய விருந்தை உருவாக்கி வழங்கியவர் ஓர் இளைஞர். அவர் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். அவர்தான் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்.
தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860-ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார்.
ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்துவிட்டார். அதைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம்.
ஒருமுறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் "தமைய பருவதம்' என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, ""அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?'' என்று வினவினார்.
அதற்கு அண்ணாமலையார், ""தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா'' என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்ட ஆசிரியர், ""அப்பா அண்ணாமலை! உன் புலமைப் பசிக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க'' என்று ஊக்கப்படுத்தி, அவருக்கு விடைகொடுத்து அனுப்பினாராம்.
சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார்.
விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார்.
தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், ""இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்'' என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.
அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாத சுந்தரதாசுத்துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடிய பாடல்களைக் கேட்ட அரசர், ""இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்! இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகிறேன்'' என்றார். அரசரின் உரையைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார்.
அரசரைப் பார்த்து, ""இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா என்பதைத் தாங்கள் பரிசோதித்து உணரலாமே'' என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, ""காரிகை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருள் துறை அமைய ஒரு கட்டளைக் கலிப்பா இயற்றுக'' என்றார். அண்ணாமலை உடனே பாடினார். பாடலைக் கேட்டு மன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின் திறமை கண்டு வியந்தார். அவரது கவித்திறமை கண்ட அரசர், அவரை முகவூர் இராமசாமிப் புலவரிடம் இலக்கணம் கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்று வந்தார்.
பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில் இருந்த உ.வே.சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணியதேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார்.
திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார். ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார்.
மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார்.
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.
""சீர்வளர் பசுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் - அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல்செய் வாமே''
என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார். பாடல் கேட்ட அனைவரும் "முருகா முருகா' என்று கூறி மெய்மறந்தனர்.
எத்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு, வெவ்வேறு துறை. எல்லாம் புதுமை, எதுகை, மோனைகள் வந்து ஏவல் கேட்டன. இயைபுத்தொடை அடிதோறும் அணி வகுத்து நின்றது. அன்றிலிருந்து, "வாக்கிற்கு அருணகிரி' என்ற வாசகம், "வாக்கிற்கு அண்ணாமலை' என்று விரிந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச்சிந்து மலர்ந்தது.
அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது. வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார்.
இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார்.
காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை.
1891-ஆம் ஆண்டு தைமாதம் அமாவாசையன்று தமது 29-வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
திவான் பகதூர் மலைய பெருமாள்அகரம் சுப்பராயுலு ரெட்டியார் (1855 – 1921) சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் அல்லது பிரதமர்[1] ஆவார். சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறையின் கீழ் நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற பின், மாகாணத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழு மாத காலமே பதவியில் இருந்த அவர் ஜூலை 1921 இல் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.[2][3]
பிறப்பும் படிப்பும்தொகுசுப்பராயுலு ரெட்டியார் 1855 ஆம் வருடம் அக்டோபர் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர், செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பு படித்தார்.[4][5]
ஆரம்ப கால அரசியல் வாழ்க்கைதொகுசுப்பராயுலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த அவர் 1916 ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகினார். 1917 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட வாரியத்தின் தலைவரானார். தியாகராய செட்டி, டி. எம். நாயர் ஆகியோர் தொடங்கிய நீதிக் கட்சியில் இணைந்தார். வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரி சென்னை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப் பட்ட நீதிக் கட்சி குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் கடலூர் மாவட்டம் மலையபெருமாள் அகரம் எனும் சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார் இவரதுு இல்லம் இன்னும் இந்த கிராமத்தில் உள்ளது இவரது பெயருக்கு முன்னால் அகரம் எனும் பெற்றுக்கொண்டுள்ளார் அது எதற்காக என்று இன்றைய வரைக்கும் எவராலும் கண்டுபிடிக்கவில்லை இவரது நினைவாக கடலூரில் சுப்பராயலு ரெட்டியார் எனும் பெயரில் ஒரு மண்டபம் உள்ளதாக குறிப்பிடத்தக்கது[6]
இரட்டை ஆட்சி முறையில்தொகு1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் விளைவாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள் துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசவையின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. சென்னை மாகாணத்தில சட்ட சபை விரிவு படுத்த்தப்பட்டு மொத்தமுள்ள 134 உறுப்பினர்களில் 98 பேர் நேரடி தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[7][8][9][10]இம்முறையின் கீழ் சென்னை சட்டமன்றத்திற்கு நவம்பர் 1920 இல் முதல் தேர்தல் நடத்தப் பட்டது. நீதிக்கட்சி பெருவாரியான இடங்களை பிடித்தது. ஆளுனர் வில்லிங்டன் நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆனால் செட்டி தனக்கு பதிலாகத் தன் கல்லூரித் தோழரான சுப்பராயுலுவை பரிந்துரை செய்தார். இதனால் டிசம்பர் 17, 1920 இல் சுப்பராயுலு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார். கல்வி, சுங்கம், பொதுப் பணிகள் ஆகிய துறைகளுக்கு அவரே அமைச்சரானார். இவரது அமைச்சரவையில் இடம் பெற்ற மற்ற அமைச்சர்கள் பனகல் அரசர் ராமராயநிங்கர் (உள்ளாட்சித் துறை), கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (வளர்ச்சித் துறை). பதவியேற்ற ஏழு மாத காலத்திற்குள் சுப்பராயுலுவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. எனவே ஜூலை 11, 1921 இல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் பனகல் அரசர் முதல்வரானார்.[
மரணம்தொகுசுப்பராயுலு ரெட்டியார் நவம்பர் 1921 இல் மரணமடைந்தார்